காதல் என்ற ஒற்றைப்புள்ளியில்தான் உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது. தன் குடும்பம், குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் என இப்படி யாரோ ஒருவரின் மீது நாம் கொண்டிருக்கும் காதல் தான் நம் இலக்கை நோக்கி நம்மை அனுதினமும் நகர்த்திக்கொண்டிருக்கிறது.
இப்படி தனது சுயநலமற்ற காதலால் தனது எதிர்கால இலங்கை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறார் வினு.
11 வருட ஆத்மார்த்தமான காதலில் காலனாய் வந்தது அந்த கோரவிபத்து.
கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்த வினுவுக்கு 25 வயது இருக்கையில், 16 வயதான லினிசாவின் மீது காதல் ஏற்பட்டது.
11 வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்துவந்தனர். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தததையடுத்து, லினிஷாவின் பெற்றோரிடம் பெண் கேட்டு சென்றுள்ளார் வினு.
ஆனால், தங்களது மகள் செல்லமாக வளர்ந்தவள், அதுமட்டுமின்றி அன்றாடம் கூலி வேலைபார்க்கும் வினுவுக்கு திருமணம் செய்துவைக்க மறுத்துவிட்டனர். இருப்பினும் இவர்கள் இருவரும் காதலில் உறுதியாக இருந்தனர்.
பெற்றோர் எப்படியாவது சம்மதிக்க வேண்டும் என்பதற்காக, வினு மீண்டும் பெண் கேட்டு சென்றுள்ளார். இவர்களின் காதலின் ஆழத்தை அறிந்துகொண்ட பெற்றோர் திருணத்திற்கு சம்மதம் தெரிவித்ததையடுத்து, 2016 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்று ஆகஸ்ட் 28 ஆம் திகதி திருமணம் செய்ய முடிவுசெய்யப்பட்டது.
ஆனால், துரதிஷ்டவசமாக மே 30 திகதி லினிசா மற்றும் அவரது குடும்பத்தினர் சாலை விபத்தில் சிக்கினர். இதில், லினிசாவின் பெற்றோர் படுத்த படுக்கையாகினர். லினிசா கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.
இரண்டு ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் லினிசாவிடம், தான எப்போதும் பேசுவது போல தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார் வினு.
லினாவிடம் இருந்து எவ்வித பதிலும் கிடைக்காது என தெரிந்தும், தனது காதலியிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்.
காலை 7 மணிக்கு தனது காதலியை வந்துபார்த்துவிட்து மாலை 6.30 மணிக்கு மீண்டும் வருகிறார். மீதியுள்ள நேரத்தினை தனது காதலியுடன் செலவிடுகிறார்.
இவரது வருமானத்தின் மூலம் தான் லினிசா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சிகிச்சைக்கான பணம் செலவழிக்கப்படுகிறது.
சிறிய வருமானத்தால் சிரமப்பட்ட இவருக்கு, நண்பர்கள் சேர்ந்து ரூ.1 லட்சம் நிதியுதவி பெற்றுக்கொடுத்துள்ளனர். லினிசா கோமாவில் இருப்பதால் வேறு ஒரு வாழ்க்கை துணையை தேடிக்கொள்ளுமாறு எனது நண்பர்கள் கூறினாலும், அவளது இடத்தில் வேறு யாரையும் என்னால் நினைத்து பார்க்ககூட இயலவில்லை என கூறுகிறார் வினு.