வயதான அத்தை சேமித்து வைத்திருந்த பரம்பரை பணத்தை திருடிக்கொண்டு, உலக நாடுகளை சுற்றிப்பார்த்த பிரித்தானிய பெண்ணுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இங்கிலாந்தின் வில்ட்ஷயர் பகுதியை சேர்ந்த ஸ்டீபனி கொலசந்தி, தனியார் வங்கி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.
இவருடைய 84 வயதான குளந்தா பென்னெட், பரம்பரை சொத்தாக £500,000-ஐ வங்கியில் சேர்த்து வந்துள்ளார்.
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட ஸ்டீபனி, தன்னுடைய வேலையை விட்டு நின்றதோடு வயதான அத்தைக்கு தெரியாமல், ஆன்லைன் மூலம் பணத்தை திருடியுள்ளார்.
அதனை வைத்துக்கொண்டு இந்தியா, எகிப்து, கிரீஸ், கென்யா, கேப் வெர்டே மற்றும் லிப்ஸா ஆகிய நாடுகளை சுற்றிபார்த்துள்ளார்.
அங்கு கார், போதை மருந்து உட்கொள்ளுதல் உள்ளிட்ட தேவைகளுக்காக பணத்தை செலவு செய்துள்ளார்.
இதற்கிடையில் வங்கி கணக்கை சோதனை செய்து பார்க்கும் போது அதில், பணம் எதுவும் இல்லாததை அறிந்த பென்னெட் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், ஸ்டீபனியை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, £175,000 பவுண்டுகளை செலவு செய்திருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் வழக்கினை கேட்டறிந்த நீதிபதி குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.