ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவருக்கும், வேறு பெண்ணுடன் தவறான தொடர்பு இருந்துள்ளது. அதை அறிந்த அவரது மனைவி கணவனிடம் அடிக்கடி சண்டைபோட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கணவன் மீது கடும் கோபம் கொண்ட மனைவி அவரது வீட்டில் கணவன் தூங்கும் நேரம் பார்த்து அறைக்கு சென்றுள்ளார். அப்போது ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த கூலி தொழிலாளியை அவரது மனைவி, திடீரென கணவன் என்று கூட பாராமல் அவரது மர்ம உறுப்பை, கத்தியால் துண்டித்துள்ளார்.
வலியால் அலறி துடித்த தொழிலாளியை, அண்டைவீட்டார்கள் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில், அந்த தொழிலாளி சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து வந்த போலீசார் கூலி தொழிலாளியின் மனைவியை கைது செய்துள்ளனர்.