திடீரென்று மறைந்து விட்ட பழனி மலை….!

தைப்பூச தினத்தன்று பழனியில், சுத்தமாக வெயிலே அடிக்கவில்லை. ஏறக்குறைய 7 லட்சம் பேர் அன்று பழனிக்கு வருகை தந்தனர்.

இந்த தை மாதம் முடியும் வரையிலும், இன்னும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் பாத யாத்திரை வந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால், மாலை 7 மணி முதல், காலை 7 மணி வரையிலும், இங்கு பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. இதனால், பக்தர்கள் ஆங்காங்கே தங்கிக் கொள்கிறார்கள். பழனி மலைக்கு தெற்கே, கொடைக்கானல் மலைத் தொடர்ச்சிகள் இருக்கின்றன.

இன்று காலை 8 மணி வரை, கடும் பனிப்பொழிவு இருந்தது. காலை 8.16 மணி வரை, பழனி மலையே சுத்தமாகத் தெரியாமல், பனி மேகம் மூடிக் கொண்டது. பாத யாத்திரை வரும் பக்தர்கள், காலையில், துாரத்தில் தெரியும், பழனி மலையைக் கண்டு வணங்கியவாறே, நடைப் பயணத்தை மேற் கொள்வார்கள்.

ஆனால், இன்று காலை பழனி மலையே 8.16 மணி வரை அருகிலேயே பழனி மலை தெரியாததால், பக்தர்கள், எங்கே பழனி மலையே தெரியவில்லையே? என்று அங்கலாய்த்துக் கொண்டனர்.

8.30 மணிக்குத் தான், வெயில் எட்டிப் பார்த்தது. அதன் பிறகு தான், பழனி மலையே லேசாக கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்தது.

இந்தக் கடும் பனியால், பழனி மக்களும், பக்தர்களும், மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.