சம வேலை சம ஊதியம், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 7 வருடங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜாக்டோ-ஜியோ என்பது அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய கூட்டமைப்பாகும்.
இந்த நிலையில் மீண்டும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் நடைபெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் 7 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர் என்று ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர், இன்றையில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்களருக்கு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். வேலைநிறுத்தத்தை கைவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது., நாட்டிற்கு தேவையான உதவிகளை காலநேரமின்றி பணியாற்றிய ஆசிரியர்கள் தேர்தல் நேரத்தில் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்.
இதனை ஏற்று மாணவர்களின் எதிர்காலத்தை கருதி வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது., இந்த போராட்டமானது தொடரும் பட்சத்தில் தமிழகத்தின் முதல்வரோடு பேச்சு வார்த்தை நடத்தி., நல்ல முடிவை அறிவிப்போம். வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் மீது இப்போதைக்கு “டெஸ்மா” சட்டம் பாயுமா? என்று கேட்டால் இரண்டு நாளைக்கு பின்னர்தான் இதற்கான கேள்வியை கேட்கவும்., அதற்கான பதிலை தெரிவிக்கவும் இயலும் என்று தெரிவித்தார்.