இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நியூசிலாந்தின் நேப்பியர் நகரில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியின் வேகத்தில் நியூசிலாந்து வீரர்கள் ரன்கள் குவிக்க தடுமாறிய நிலையில், தொடக்க வீரர்கள் சமியின் துல்லிய பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார்கள். பின்னர் நிலைத்து நின்று ஆடிய ரோஸ் டெய்லர், கேப்டன் வில்லியம்சன் இணை அதன் பின் வந்த சுழற்பந்துவீச்சாளர் சாகல் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் சுழலில் நியூசிலாந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பகுதி நேர பந்துவீச்சாளர் கெதர் ஜாதாவும் ஒரு விக்கெட் வீழ்த்த, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் 64 ரன்களை குவித்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்த, ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்த, சாஹல் 2, ஜாதவ் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இதன் பின்னர் ஆட்டம் 38 ஓவருக்குள் முன்கூட்டியே முடிந்ததால் உணவு இடைவேளைக்கு முன்னரே களமிறங்கிய இந்திய அணி 9 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு 117 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணி உணவு இடைவேளைக்கு சென்றது. உணவு இடைவேளை முடிந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டம் தொடங்கிய இரண்டாவது பந்திலேயே ரோஹித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் கோலி களமிறங்க அந்த ஓவரின் முடிவில் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
மழையாலும், ஈரப்பதமான ஆடுகளத்தினாலும் தடைப்பட்டுவந்த ஆட்டம் அதிகப்படியான சூரிய வெளிச்சத்தில் தடைபட்டது. தெற்கு வடக்காக இருக்க வேண்டிய ஆடுகளமானது கிழக்கு மேற்காக இருக்கும் நிலையில் நேரடியாக சூரிய ஒளியானது பேட்ஸ்மேன் கண்களில் படுவதால் பாதுகாப்பு கருதி ஆட்டத்தினை நிறுத்தி வைக்கப்பட்டது.
அரை மணி நேரம் தடங்கலுக்கு பிறகு ஆட்டம் தொடங்கிய நிலையில், இந்திய அணிக்கு ஒரு ஓவர் குறைக்கப்பட்டு வெற்றிக்கான இலக்கும் மாற்றியமைக்கப்பட்டது. 158 ரன்கள் என்பதை 156 என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தரப்பில் தவான், கோலி இணை நிதானமாகவும், அதே சமயம் அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும் விளையாடினார்கள். தவான் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் தவான் 75 ரன்களுடனும், ராயுடு 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். விராட் கோலியும் அரைசதத்தை நோக்கி முன்னேறிய நிலையில் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்திய அணி 2009 ஆண்டுக்குப்பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்தில் பெற்ற வெற்றி இதுவாகும். 2009 தொடரின் கடைசி போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி 2014 தொடரில் 5 போட்டிகளில் 4 தோல்வி ஒரு டையில் முடித்தது. 2015 உலகக்கோப்பையில் இரண்டு போட்டியில் இந்திய அணி நீயூசிலாந்து மண்ணில் வெற்றி பெற்றாலும் அது மற்ற அணிகளுக்கு எதிரான வெற்றியாகும்.