கையில் கோடரியுடன் பொதுமக்களை விரட்டிய நபர்: அதிர்ச்சி வீடியோ

தெற்கு லண்டன் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வாடிக்கையாளர்களை நோக்கி கையில் கோடரியுடன் மர்ம நபர் விரட்டும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு லண்டனின் Purley பகுதியில் செயல்பட்டு வரும் சூப்பர் மார்க்கெட்டில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

நீளமாக ஜாக்கெட் அணிந்தவாறு, முகமூடியுடனும், கையில் கோடரியுடனும் மர்ம நபர் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் 10 பேரை விரட்ட ஆரம்பிக்கிறார்.

இதனை பார்த்து பயந்துபோன அனைவரும் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பிக்கின்றனர்.

இந்த காட்சியானது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இதனை கடையில் உரிமையாளர் பேஸ்புக்கில் பதிவிட்டதை அடுத்து, பொதுமக்கள் அனைவரும் அச்சம் தெரிவிக்க ஆரம்பித்தனர்.

இதற்கிடையில் சம்பவம் குறித்து அறிந்த பொலிஸார், வீடியோவை கைப்பற்றி அதில் இடம்பெற்றிருக்கும் நபர் குறித்து தீவிரமான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.