மனைவி செய்த துரோகம்.. : நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவியுடன் வாட்ஸ் ஆப்பில் பேசி வந்த இளைஞரை தட்டிக் கேட்ட கணவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொற்றிக்கோடு கூழக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி சுலோக்சனா, இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், செவ்வாய்கிழமை நள்ளிரவு ராஜ் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது அவரது வீட்டிற்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல், அவரது வாயில் துணியைத் திணித்து வீட்டிற்கு வெளியே இழுத்துச்சென்றது.

அடுத்த சில நொடிகளில், ராஜின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த அந்த கும்பல், அங்கிருந்து தப்பிச்சென்றது. சத்தம் கேட்டு விழித்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது, ராஜ் அங்கு சடலமாக கிடந்தார்.

அப்போது வீட்டில் ராஜின் மனைவியை சுலோக்சனா இல்லாத நிலையில் பின்னர் அங்கு வந்து கதறி அழுதார்.

தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் இளைஞர் ஜெயசிங் தனக்கு உதவியதாகவும், அவர் மீது சந்தேகப்பட்டு கணவர் அவரது வீட்டிற்கு சென்று சத்தமிட்டதால் இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என்றார் சுலோக்சனா.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்தனர். அதில், ராஜின் மனைவி சுலோக்சனா பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜெயசிங் என்பவருடன் பழகி வந்ததாக கூறப்படுகின்றது.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு சுலோக்சனா, தனது குழந்தைகளுக்கு தேவையான பள்ளி புராஜெக்ட் பொருட்களை வாங்கி வர ஜெயசிங்கிடம் கூறி உள்ளார்.

பொருட்களுடன் வீட்டுக்கு வந்த ஜெயசிங்குடன் சுலோக்சனா தனிமையில் இருந்ததாகவும், அதனை வீட்டுக்கு வந்த கணவர் ராஜ் பார்த்து சத்தம் போட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு பின்னரும் இருவரது பழக்கம் தொடர்ந்துள்ளது. வாட்ஸ் ஆப் மூலம் இருவரும் பேசி, சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.

மனைவியின் நடவடிக்கைகளை நோட்டமிட்ட ராஜ், சம்பவத்தன்று அவரது செல்போனில் வாட்ஸ் ஆப் மூலம் தகவல் அனுப்புவது யார் என்று ஆய்வு செய்துள்ளார். அதில் அந்த நபர் பக்கத்துவீட்டில் வசிக்கும் ஜெயசிங் என்பதை கண்டறிந்துள்ளார். இதையடுத்து, அவரது வீட்டிற்கு நேரடியாக சென்று சண்டையிட்ட ராஜ் கடுமையாக எச்சரித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெய்சிங், தனது உறவினர் மற்றும் கூட்டாளிகள் துணையுடன் நள்ளிரவில் ராஜின் வீட்டிற்குள் புகுந்து வாயில் துணியை வைத்து அடைத்து கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் கொலையாளிகளுக்கு வீட்டுக் கதவை திறந்து விட்டது யார்? கொலை நடந்த நேரத்தில் வீட்டில் இல்லாத அவரது மனைவி சுலோக்சனா எங்கே சென்றார்? என்ற கோணத்தில் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.