பஞ்சாபில் வசிக்கும் 81 வயதான மொஹிந்தர் சிங் மற்றும் அவரது மனைவிக்கு திருமணமாகி 47 வருடங்களாகக் குழந்தை பாக்கியம் இல்லை.
இதனால் 5 வருடங்களுக்கும் முன்பு செயற்கை கருத்தரித்தல் (IVF) மூலம் ஆண் குழந்தை பிறந்தது.
வயது முதிர்ந்த நிலையில் பெற்றோர் ஆனதைக்கண்டு சற்றும் மனம் தளரவில்லை.
அனைவருக்கும் ஒரு கனவு இருக்கும், அவை அனைத்தும் கடவுள் நினைத்தாலே நிறைவேறும். என்னைப்பற்றி மற்றவர்கள் சொல்லும் கருத்தை நான் பெரியதாய் எடுத்துக்கொள்ளவில்லை. நான் தாய்மை அடைந்ததே எனக்கு முக்கியம்,” என்கிறார் தல்ஜிந்தர்.
குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை வளர்ப்பு தான் நினைத்தை விட சிரமமாக இருந்தபோதும் தான் ஒரு போதும் இந்த வயதில் தாயனாதை நினைத்து வருந்தவில்லை என்கிறார்.
74 வயதில் வயதுக்கு ஏற்ற பலவீனமான மூட்டுகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்பதால் சற்று சிரமப்படுகிறார் தல்ஜிந்தர்.
வயதாகி குழந்தைப்பெற்றதால் 3 மாதத்திற்கு மேல் குழந்தைக்கும் தல்ஜிந்தரால் தாய்பால் கொடுக்க முடியவில்லை. தனது வயதுக்கு சற்று உடல் எடை குறைவாக இருந்ததாலும் மகன் அர்மான் ஆரோக்கியமாக இருக்கிறார்.
நாங்கள் இறந்தப் பிறகு குழந்தையின் நிலை என்ன என பலர் கேட்கின்றனர்; நான் கடவுளை நம்புகின்றேன் அவர் அனைத்தையும் பார்த்துக்கொள்வார்,” என முடிக்கிறார் மொஹிந்தர் சிங்.