மகாராஷ்டிரா மாநிலத்தில் பணப்பிரச்சனை காரணமாக தனது நண்பரை கொலை செய்து 150 துண்டுளாக ஆட்டுக்கறியை நறுக்குவது போன்று கொத்துக்கறி போட்டு அடைத்து வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பால்கர் மாவட்டம் விரார் மேற்கு எவர்சைன் அவென்யூ பகுதியில் பச்ராஜ் பாரடைஸ் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் கடந்த சில நாட்களாக தாங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியுள்ளது
அங்குள்ள கழிவுநீர் தொட்டியின் மூடியை திறந்தனர். அப்போது, கழிவுநீரில் 3 மனித விரல் துண்டுகள் மிதந்து கொண்டு இருந்தன. இதைப்பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்து உடனடியாக பொலிசிற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
மேலும் அங்குள்ள சாக்கடையிலும் மனித உடல் பாகங்கள் மிதந்து கொண்டிருந்தன. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த உடல் பாகங்களையும் பொலிசார் கைப்பற்றினர்.
150-க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் பாகங்கள் 40 கிலோவுக்கும் மேல் எடை கொண்டதாக இருந்தன.
இந்தநிலையில், மனித உடல் பாகங்கள் பச்ராஜ் பாரடைஸ் கட்டிடத்தின் 6-வது மாடியில் உள்ள 602-ம் எண் வீட்டில் உள்ள கழிவுநீர் குழாய் வழியாக போடப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
அந்த வீட்டை மும்பை சாந்தாகுருஸ் வகோலாவை சேர்ந்த பிண்டு சர்மா(42) என்பவர் வாடகைக்கு எடுத்து இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து பொலிசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
பிண்டு சர்மா பங்கு தரகராக உள்ளார், இவரிடம் நண்பர் கணேஷ் கோலட்கர் 1 லட்சம் ரூபாய் பணம் கடனாக வாங்கியுள்ளார்.
அதில், ரூ.40 ஆயிரத்தை மட்டும் திருப்பி கொடுத்தார். மீதி 60 ஆயிரத்தை கொடுக்கவில்லை. அந்த பணத்தை கேட்டு கணேஷ் கோலட்கரை தொந்தரவு செய்து வந்தார்.
மீதி பணத்தை திருப்பி கொடுக்காத காரணத்தால் இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, இருவரும் பேசிக்கெண்டிருந்தபோது பணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, கணேஷை பிடித்து சர்மா தள்ளிவிட்டுள்ளார். இதில் கணேஷின் தலைஅடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சர்மா, இது வெளியில் தெரிந்தால் மாட்டிக்கொள்வோம் என பயந்து, தனது வீட்டில் வைத்து கணேஷின் உடல் பாகங்களை 150 துண்டுகளாக ஆட்டுக்கறி நறுக்குவது போன்று நறுக்கி கழிவுநீர் தொட்டியில் வீசியுள்ளார்.
இதையடுத்து பொலிசார் பிண்டு சர்மாவை அதிரடியாக கைது செய்தனர்.