அமெரிக்காவில் மதுபோதையில் மலை உச்சியில் செல்பி எடுக்க முயன்ற இந்திய தம்பதியினர் தவறி விழுந்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர்கள் மது அருந்தியிருந்தது தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம், செங்கானுரை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் விஷ்ணு விஸ்வநாத் (29), இவருக்கும் இவரது மனைவி மீனாட்சியும் மலையேற்ற பயிற்சியில் மிக ஆர்வம் கொண்டவர்கள்.
கடந்த அக்டோபர் 25ம் தேதி அமெரிக்காவின் யோஷ்மைட் தேசிய பூங்காவுக்கு இவர்கள் சுற்றுலா சென்றனர். அங்குள்ள 800 அடி உயர மலை உச்சியில் செல்பி எடுத்துள்ளார்கள்.
800 அடி உயர பாறையில் இருந்து தவறி விழுந்து இறந்தனர். சில தினங்களுக்கு முன்தான் இவர்கள் தவறி விழுந்து இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இருவரும் விபத்துக்கு முன்பாக மது குடித்திருந்தது தெரிய வந்துள்ளது. பிரேத பரிசோதனை அதிகாரி ஆன்டிரியோ ஸ்டீவர்ட் கூறுகையில், இறந்த தம்பதியின் உடலில் ஆல்கஹால் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், விபத்து நடந்து நீண்ட நாட்களாகி உடல்கள் பாகங்கள் அழுகி விட்டதால், அவர்கள் எவ்வளவு மது அருந்தினர் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளனர்.