அமெரிக்காவில் பல இந்தியர்கள் ஐ.டி ஊழியர்களாகவும்., பிற அரசு துறைகைளையும் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில்., அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் ஐ.டி ஊழியர்களாக பணியாற்றி வந்த தம்பதியினர் விசு விஸ்வநாத் (29)., மீனாட்சி மூர்த்தி (வயது 30).
இவர்கள் இருவரும் கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்டு பின்னர் அமெரிக்காவில் சென்று பணிநிமித்ததால் குடியேறியவர்கள். அங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று வர முடிவு செய்த இவர்கள்., கலிபோர்னியா மகாநாட்டில் உள்ள சுற்றுலா தலமான யோசிமிட்டே தேசிய பூங்காவுக்கு., கடந்த வருடத்தில் அக்டோபர் மாதத்தில் 25 ம் தேதியன்று சென்றிருந்தனர்.
அங்குள்ள மலை உச்சிக்கு செல்ல ஆசைப்பட்ட இவர்கள்., மலை உச்சிக்கு சென்று சுமார் 800 மீ உயரத்தில் இருந்து செல்பி எடுக்கும் போது தவறி இருவரும் விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதனை கண்டு கொண்டு இருந்த சக சுற்றுலா பயணிகள் உடனடியாக சம்பவம் குறித்து காவல் துறையினருக்கும்., மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் இவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் இவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. மலை முகட்டில் இருந்து செல்பி எடுக்கும் போது நிலை தடுமாறிய இவர்கள் கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.