மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கிற பா.ஜ.க.வின் ஆட்சி தான் உத்திரபிரதேசத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு முதல்வராக யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்கிறார்.
உத்திரபிரதேசத்தில் உள்ள ஜாலுன் என்ற கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு, ஒரு கர்ப்பிணிப் பெண் வந்தார். அந்தப் பெண்ணைப் பரிசோதித்த அரசு மருத்துவர்கள், அந்தப் பெண்ணை, பிரசவத்திற்காக அனுமதிக்க மறுத்தனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர், அந்தப் பெண்ணுடன் வந்த உறவினர்கள். அவர்கள், அங்குள்ள அரசு டாக்டர்களிடம் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தனர். ஆனால், அவர்கள், ஏதேதோ மருத்துவக் காரணங்களைச் சொல்லி மறுத்து விட்டனர்.
பாவம், அந்தப் பெண் பிரசவ வலியால் துடித்தாள். வேறு வழியில்லாமல், அந்த ஆஸ்பத்திரிக்கு வெளியே உள்ள சாலையின் ஓரத்தில், சற்று நேரத்திற்கு முன்பாக,அந்தப் பெண்ணிற்கு, தானாக சுகப் பிரசவம் ஆனது.
அந்தப் பெண்ணுடன் வந்த உறவினர்கள், அந்தப் பெண்ணைச் சுற்றி சேலைத் துணிகளால் மறைப்பு கொடுத்து உள்ளனர்.
தற்போது, அந்தப் பெண்ணின் உறவினர்கள், அந்த ஆஸ்பத்திரியின் வாசலிலேயே முகாமிட்டுள்ளனர்.
இந்த செய்தி தற்போது வைரலாகப் பரவி வருகிறது. இதற்கு நரேந்திர மோடியும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பதில் கூற வேண்டும், என்று வலியுறுத்தி வருகின்றனர்.