அயல்நாட்டில் வேலை செய்த கணவன்! பிள்ளைகளுடன் சொந்த ஊரில் வசித்த மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!

திண்டுக்கல் மாவட்டம் குள்ளனம்பட்டி அருகே உள்ள பர்மா காலனியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் துபாயில் வேலை செய்கிறார். இவரது மனைவி கலைச்செல்வி மற்றும் இரண்டு குழந்தைகள் சொந்த ஊரிலே வசித்துவந்துள்ளனர்.

நேற்று மதியம் கலைச்செல்வியின் செல்போனுக்கு பிரபாகரன் தொடர்பு கொண்டார். அவர் அழைப்பை ஏற்கவில்லை. பலமுறை முயற்சித்தும் செல்போனை எடுக்காததால் வேலைக்கார பெண்ணுக்கு தகவல் தெரிவித்தார். அப்பெண் வீட்டுக்கு சென்றபோது கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது.

ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது கலைச்செல்வி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். சொத்துக்காகவே இக்கொலை நடந்திருக்க அதிக வாய்ப்புள்ளது என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

வீட்டில் நகை மற்றும் பணம் எதுவும் கொள்ளை போகாததால் முன்விரோதம் அல்லது சொத்து பிரச்சினை காரணமாக கலைச் செல்வி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற நோக்கில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.