நீண்ட நாள் காதலியைக் கரம்பிடித்த மஹிந்தவின் கனிஷ்ட புதல்வர்….!!

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர், ரோஹித ராஜபக்சவின் திருமண நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

மணமகன் ரோஹித ராஜபக்‌ஷ, மணமகளான டட்யானாவை சிங்கள பௌத்த திருமணச் சம்பிரதாயப்படி கரம்பிடித்தார்.தங்காலை வீரகெட்டிய என்ற இடத்திலேயே இந்த திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.

மஹிந்த ராஜபக்‌ஷவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நாட்டின் முக்கியமான அரசியற் தலைவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இதற்கான அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டதாக அறியமுடிகிறது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இதற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டபோதும், அவர் நேற்றைய தினம் சிங்கப்பூருக்கான விஜயத்தினை மேற்கொண்டபடியால் இன்றைய திருமண நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.