இந்திய மாநிலம் கேரளாவில் புகுந்த வீட்டாரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்ணின் நாட்குறிப்புகள் புயலைக் கிளப்பியுள்ளது.
கேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் 25 ஆம் திகதி மாயமான ஆன்லியா என்ற இளம்பெண்ணின் சடலம் 28 ஆம் திகதி பெரியார் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது.
மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குறிப்பிட்டு அவரின் தந்தை ஹைஜினஸ் புகார் அளித்த நிலையிலேயே ஆன்லியா அனுபவித்த கொடுமைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஜஸ்டின் என்பவருடன் ஆன்லியாவின் திருமணம் முடிந்த சில நாட்களில் ஆன்லியாவின் தந்தையும் தாயாரும் பணி நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளனர்.
ஜஸ்டின் வெளிநாட்டில் பணியாற்றுபவர் என கூறியே ஆன்லியாவை திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணத்திற்கு பின்னர் அது பொய் எனவும், கேரளாவில் தொழில் தொடங்கும் எண்ணத்துடன் இருந்தவருக்கே ஆன்லியாவை திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதனிடையே தொழில் தொடங்குவது தொடர்பில் ஆன்லியாவுக்கும் கணவர் ஜஸ்டினுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மட்டுமின்றி ஆன்லியாவை ஜஸ்டின் கொடூரமாக தாக்கியும் வந்துள்ளார். இந்த தகவல்கள் அனைத்தும் ஆன்லியா தமது டயரியில் எழுதியும் வந்துள்ளார்.
மட்டுமின்றி ஜஸ்டின் அந்த டயரியை கண்டுபிடிக்காமல் இருக்க தனிக்கவனமும் செலுத்தி வந்துள்ளார்.
தமது மகளுக்கு ஹைஜினஸ் சீதனமாக அளித்த குடியிருப்பிலேயே இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர். ஆன்லியாவின் மறைவுக்கு பின்னர் குடியிருப்பு முழுவதுமாக பரிசோதனையிட்டதில் இந்த டயரி சிக்கியுள்ளது.
அதில் அவர் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் எந்த தந்தைக்கும் தாங்க முடியாதது என தெரிவிக்கும் ஹைஜினஸ்,
தமது மகள் தொடர்பில் ஜஸ்டின் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் பொய் எனவும், அவளின் நடத்தையில் சந்தேகம் என கூறுவது கொலையில் இருந்து தப்பிக்கவே எனவும் ஹைஜினஸ் குறிப்பிட்டுள்ளார்.