வவுனியா பழைய பஸ் நிலையப்பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை 7 வயது மற்றும் 9வயதுடைய இரு சிறுவர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் தந்தை என்று சொல்லப்படும் ஒருவருடன் நீண்ட நேரமாக பஸ் நிலையத்தில் நின்றிருந்ததை அவதானித்துள்ள வியாபார நிலைய உரிமையாளர்கள் பொலிஸாருக்கு இத்தகவல்களை வழங்கியுள்ளனர்.
நேற்று மாலை பொலிஸார் இரு சிறுவர்களையும் சிறுவர்களின் தந்தை என்று நம்பப்படும் மதுபோதையிலிருந்த நபர் ஒருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது ;
நேற்று காலை முதல் மாலை வரை வவுனியா பழைய பஸ் நிலையப்பகுதியில் 7வயது மற்றும் 9வயது மதிக்கத்தக்க பெண் ஆண் என இரு சிறுவர்கள் தமது தந்தை என்று சொல்லிக்கொண்ட நபர் ஒருவருடன் நீண்ட நேரமாக பஸ் நிலையத்தில் நின்றிருந்ததை அவதானித்துள்ள வர்த்தகர்கள் சிலர், அவர்களின் நடவடிக்கையில் சற்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதையடுத்து நேற்று மாலை 5மணியளவில் வவுனியா பொலிஸாருக்கு இத்தகவலை வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சிறுவர்பிரிவு பொலிஸார் பஸ் நிலையத்தில் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று தந்தை என்று அழைக்கப்பட்டவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோது, அவர் மது போதையிலிருப்பது தெரியவந்துள்ளது.