அப்பா அவமானமா இருக்கு… தந்தையின் செயலால் உயிரைவிட்ட மகள்!

இந்தியாவின் மாற்றாந்தந்தை தொடர்ந்து மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதால் 17 வயது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்தவர் தீப்தி பேட். இவர் கடந்த 2006-ல் நபர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

தீப்திக்கு ஏற்கனவே முதல் கணவர் மூலம் வேதிகா (17) என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் வேதிகாவை அவரின் மாற்றாந்தந்தை தொடர்ந்து மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்தார்.

இதனிடையில் நான்கு மாதங்களுக்கு முன்னர் அந்த நபர் வேறு நபரை திருமணம் செய்து கொண்டு தீப்தியை பிரிந்தார்.

ஆனாலும் அடிக்கடி வந்து தீப்தியையும், வேதிகாவையும் பார்த்து சென்றார்.

அப்போது வேதிகா செல்போன் உபயோகிப்பதை பார்த்த அவர் இனி உபயோகிக்கக்கூடாது என அடித்துள்ளார்.

இதன்பின்னர் சில நாட்கள் கழித்து தாய் தீப்தி வைத்திருக்கும் கடையில் அவருக்கு உதவியாக இருந்தார் வேதிகா.

அப்போது செல்போனை கையில் வைத்திருந்தார். அந்த சமயம் பார்த்து அவரின் தந்தை அங்கு வந்தார். வேதிகா செல்போன் வைத்திருப்பதை பார்த்து ஆத்திரமடைந்த அவர் எல்லோர் முன்னிலையிலும் வேதிகாவை கேவலாக திட்டி அடித்துள்ளார்.

அப்பா, அவமானமாக இருக்கிறது என கூறியும் அவர் கேட்கவில்லை. இதன்பின்னர் வீட்டுக்கு வந்த வேதிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் வேதிகா சடலத்தை கைப்பற்றினார்கள்.

மேலும் அவர் தந்தை மீது தற்கொலைக்கு தூண்டிய வழக்கை பதிவு செய்த பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.