தாயாரின் முன்னிலையில் கணவரால் சீரழிக்கப்பட்ட இளம்பெண்…

பிரித்தானியாவில் பெற்றோரின் நிர்பந்தத்தால் 19 வயதில் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தமது கணவரால் ஏற்பட்ட துயரங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.

பிரித்தானியாவின் சர்ரே பகுதியில் குடியிருந்து வரும் 40 வயதான சன்னி ஏஞ்சல் என்பவரே தமது துயர கதையை புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

மட்டுமின்றி பிரித்தானியாவில் நடந்தேறும் நிர்பந்த திருமணங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்தும் வருகிறார்.

சன்னி ஏஞ்சலுக்கு 19 வயது இருக்கும்போது அஜய் என்பவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து சில மாதங்கள் அஜயிடம் இருந்து காதல் கடிதங்களும் வாக்குறுதிகளும் வந்து குவிந்துள்ளன.

ஆனால் திருமணம் முடிந்த சில நாட்களில் சன்னிக்கு பேரிடி காத்திருந்தது. தமது கணவர் மூளை வளர்ச்சி அற்றவர் என்பதும், தமக்கு அவர் அனுப்பியதாக வந்த கடிதங்கள் அனைத்தும் அவரது தாயாரே எழுதியது எனவும் தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி முதலிரவு என்பது வாழ்க்கையில் மறக்கவே முடியாத நிகழ்வாகவே அமைந்துள்ளது.

படுக்கை அறையின் வெளியே நின்றுகொண்டு தாயார் கூறுவதை கேட்டு அஜய் தம்மை பலாத்காரம் செய்துள்ளதாக சன்னி தெரிவித்துள்ளார்.

இது ஒருநாள் அல்ல பல நாட்கள் தொடர்ந்தது எனக் கூறும் சன்னி, இரவு என்றாலே பயந்து நடுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்து மத நம்பிக்கை கொண்ட சன்னியின் பெற்றோர் 19 வயதிலேயே தங்களது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் இணையதளம் வாயிலாக அப்போது 25 வயதான அஜய் என்பவரை நிச்சயம் செய்துள்ளனர்.

இதனையடுத்து 1999 ஆம் ஆண்டு மே மாதம் அஜய் உடன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தை விடவும் அந்த நிகழ்வு ஒரு இறுதி ஊர்வலமாகவே தாம் கருதியதாக சன்னி குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் முடிந்த சில நாட்களில் அஜயின் தாயார் சீதனம் கேட்டு தொடர்ந்து தொல்லை தர துவங்கியுள்ளார்.

10,000 பவுண்டுகள் மொத்தமாக திரட்டும் குடும்ப சூழல் தங்களுக்கு அப்போது இல்லை என்பதால், அஜயின் தாயாரால் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக சன்னி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஒருமுறை தம்மை சந்திக்க பெற்றோர்கள் நடப்பவை குறித்து புரிந்துகொண்டு தங்களுடனே தம்மை அழைத்துச் செல்ல முடிவு செய்ததாக கூறும் சன்னி,

அதன் பின்னர் விவாகரத்துக்கு முயன்றதாகவும் ஆனால் தங்களது சமூகத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் நினைவு கூர்ந்துள்ளார்.

தற்போது 40 வயதாகும் சன்னி கட்டாய திருமணத்திற்கு எதிராக பிரித்தானியா முழுமையும் குரல் எழுப்பி வருகிறார்.<