சவுதி அரேபியாவில் தெய்வ நிந்தனையில் ஈடுபட்ட இந்தியரின் தண்டனையை இருமடங்காக அதிகரித்துள்ளது அங்குள்ள நீதிமன்றம்.
கேரளாவின் ஆலப்புழா பகுதியை சேர்ந்த விஷ்ண்டு தேவ் என்ற இளைஞரே தெய்வ நிந்தனை குற்றச்சாட்டில் சிக்கியுள்ளவர்.
முதலில் வெளியான தீர்ப்பில் சவுதி நீதிமன்றம் இவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது. ஆனால் அதை தற்போது 10 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
சவுதியில் பொறியாளராக பணியாற்றும் விஷ்ணு தேவ் ஐரோப்பிய பெண் ஒருவருடன் சமூக வலைதளத்தில் மேற்கொண்ட விவாதமே இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளது.
மதம் மற்றும் நபியை தரக்குறைவாக பேசியதாகவும் அங்குள்ள சட்டதிட்டங்கள் தொடர்பில் விமர்சனம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கு தம்மாம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் 5 ஆண்டுகள் சிறையும் ஒன்றை லட்சம் ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது.
தற்போது ஓராண்டாக விஷ்ணு சிறையில் இருக்கும் நிலையில், தண்டனை காலம் குறைவு எனவும், அதை மறுபரிசீலனை செய்யவும் மெல்முறையீட்டு நீதிமன்றம் கோரிக்கை வைத்தது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட மறு விசாரணையில் 10 ஆண்டுகள் சிறையும் ஒன்றரை லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி விஷ்ணு தேவ் ஒரு இஸ்லாமியராக இருந்திருந்தால் கண்டிப்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் எனவும் சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.