சில நாட்களாகவே மழை முழுதும் பெய்யாததால், பனிப்பொழிவு அதிகமாக இருப்பதை அனைவரும் அறிவோம். மாறிவரும் காலகட்டத்தினால், கடும்பனி மக்களை உறைய செய்கின்றது.
இந்த பனி காரணமாக அதிகாலையில் மக்களின் அன்றாட வேளைகளில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், பலருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டு மிகவும் அவதிக்கு உள்ளாக்குகின்றது.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும், அலுவலகங்களுக்கு செல்லும் உத்தியோகஸ்த்தர்களும் காலையில் எழுந்து கிளம்ப படும்பாடு அவரவர்க்கு தான் தெரியும். இப்படி மக்களை வாட்டி வதைக்கும் பனியானது இன்று காலை காஞ்சி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
கடும் பனிப்பொழிவின் காரணமாக காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலின் கோபுரமானது காண்போரின் கண்ணுக்கு புலப்படாத வண்ணம், பனி மறைத்துள்ளது. இதனால் அருகில் உள்ள மக்கள் அதிகாலையில் திகைப்பிற்கு ஆளாகியுள்ளனர்.