இலங்கையில் மனைவிக்கு நடந்த கொடூரம்!

மனைவியின் பிறப்புறுப்பை கத்தியால் வெட்டி கொலை செய்த கணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி இலக்கம் ஒன்று உயர் நீதிமன்றத்தின் நீதிபதி நவரத்ன மாரசிங்க என்பவரே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தங்கராசு ராமசந்திரன் என்ற 45 வயதான ஒருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி பலங்கொட தோட்டத்தில் வெல்லசாமி பரமேஸ்வரி என்பவரின் கணவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குற்றம் சுமத்தப்பட்டவருக்கு எதிராக நீண்ட காலமாக வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையினால் கணவருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.