இந்திய அணி அபார வெற்றி!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை வென்று உற்சாகத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

நேப்பியரில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஒரு நாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று காலை ஓவல் மைதானத்தில் தொடங்கியது.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியின் துவக்க மட்டையாளர்களாக களமிறங்கிய ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் துவக்கத்திலேயே அதிரடியாக ஆட ஆரம்பித்து இருவரும் அரைசதத்தை எடுத்தனர்.

சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த தவான் 25.2 ஆவது ஓவரில் 66 ரன்களில்அவுட் ஆகி வெளியேறினார். மிகவும் சிறப்பாக சிக்சரும் பவுண்டரியுமாக அதிரடியாக அடித்து ஆடிய ரோகித் சர்மா 96 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். விராட் கோலி 43 ரன்களும், அம்பத்தி ராயுடு 47 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். அடுத்ததாக தோனி சிறப்பாக ஆடி 48 ரன்களும், கேதர் ஜாதவ் 22 ரன்களும் எடுத்து இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 324 குவித்தது.

325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் துவக்கம் முதலே அதிரடியாக ஆடத் துவங்கினார். அதே சமயம் அவர்களது விக்கெட்டுகள் மளமளவென சரிய துவங்கியது. அந்த அணியின் பிரேஸ்வெல் மட்டும் 57 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆக நியூசிலாந்து அணி 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.