ஜெர்மனி நாட்டை சார்ந்தவர் மார்க்கே ப்ரோக்மேனி. இவரது கணவன் பெயர் பால் ப்ரோக்மேன் (வயது 83). இவரும் இவரது மனைவியும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். தனது மனைவியின் மீது கொண்ட பேரவலால் தனது மனைவி ஒரு நாள் அணிந்த ஆடையை மறுநாள் அணிய கூடாது என்பதற்க்காக கடந்த 57 வருடங்களில் சுமார் 55 ஆயிரம் ஆடைகளை வாங்கி தனது அன்பு மனைவிக்கு தந்துள்ளார்.
இந்த உலகத்தின் அதிகமான ஆடைகள் கொண்ட கலெக்ஷன்களை வைத்திருப்பவர்கள் என்ற பெருமையும் இவர்களையே சாரும். இவர்களது இல்லத்தில் தினமும் பால் மற்றும் மார்கொ தினமும் நடனம் ஆடுவது வழக்கம். அந்த சமயத்தில்., மனைவியான மார்கோ தேவதைகளை போன்று உடையணிந்து வரும் நேரத்தில்., அவரின் முதற்காதலை போன்றே உணருகிறேன் என்று கூறுகிறார்.
அதே போன்று., ஒவ்வொரு முறை நடனம் ஆடையும் சமயத்தில் புதிய புதிய ஆடையலான தோற்றத்தில் தனது மனைவி வர வேண்டும் என்று விரும்பிய பால்., வெளியே சென்று வரும் நேரங்களில் இரண்டு அல்லது மூன்று ஆடைகளை வாங்கி கொண்டு வரும் வழக்கத்தை வைத்துள்ளார்., அதனை கண்ட மக்கள் இவர்களை புதிய வகையிலான கலெக்சன் துணிகள் வரும் சமயத்தில் இவர்களை அழைத்து ஆலோசனை பெறுவார்கள் என்று கூறுகிறார்.
துவக்கத்தில் இது குறித்து விளங்காமல் இருந்த மார்க்கே பின்னர் தனது மீதுள்ள அதீத அன்பின் காரணமாக இவர் வாங்கி வருகிறார் என்று அறிந்ததும்., பால் வாங்கி வரும் ஆடைகளை ஏற்றுக்கொண்டு வந்துள்ளார். வாங்கி வந்த துணிகளெல்லாம் குவிந்து போக மொத்தமாக மலை போல காட்சியளித்துள்ளது. மேலும்., ஆடைகளை அலமாரியில் வைக்க இடமில்லாமல்., கடைகளில் விற்பனைகளுக்கு வைத்திருப்பது போல் வைக்க துவங்கிவிட்டோம்.
எந்த விஷயத்திற்கும் ஒரு முடிவு உண்டு என்பதை போலவே., இருவருக்கும் வயதான நிலையில்., ஆடைகளை இனிமேல் அணிய முடியாதென்று மனைவி கூறியதை கேட்டு கடந்த 2014 ம் வருடம் முதலாகவே., கடைகளில் இருந்து ஆடைகளை வாங்கி வருவதை நிறுத்திவிட்டார்.
வாங்கி வந்த ஆடைகளை விற்பனை செய்ய முடிவு செய்து சுமார் 7000 ஆடைகளை விற்பனை செய்த நிலையில்., 200 பிடித்த ஆடைகளை தனியாக எடுத்து வைத்துள்ளார். தனது மனைவியின் மகிழ்ச்சிக்காக அவருக்கு தினமும் புதிய வகையிலான ஆடைகளை வாங்கி தந்த கணவரின் உள்ளத்திற்கு ஈடு இணை எதுவுமில்லை.