திருமணத்துக்கு பின்னர் காத்திருந்த அதிர்ச்சி!

இந்தியாவில் திருமணம் செய்த காதலன் தன்னை கைவிட்டுவிட்டார் என கூறி இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தெலுங்கானா மாநிலத்தின் கரீம்நகரை சேர்ந்தவர் ரவாளி. இவர் தனது வீட்டருகில் வசிக்கும் பசுலா ஸ்ரீகாந்த் என்பவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

காதல் மயக்கத்தில் இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்ததோடு, நெருக்கமாகவும் பலமுறை இருந்தனர்.

இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள ஸ்ரீகாந்திடம், ரவாளி வற்புறுத்திய நிலையில் யாருக்கும் தெரியாமல் ரவாளியை மணந்தார் ஸ்ரீகாந்த்.

இதன்பின்னர் கணவர் வீட்டுக்கு ரவாளி சென்றார். அப்போது ஸ்ரீகாந்த் மற்றும் அவர் பெற்றோர் ரவாளியை வீட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டினார்கள்.

ஆனால் அவர் போக மறுத்ததால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

இதையடுத்து ஸ்ரீகாந்த் தன்னை திருமணம் செய்து கைவிட்டு விட்டதாக கூறி ரவாளி அவர் வீட்டு வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்து பொலிசார் ரவாளியிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.