கருவில் இருந்த குழந்தைக்காக உயிர்தியாகம் செய்த தாய்: 13 நாட்கள் கழித்து சோகம்

அவுஸ்திரேலியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவர், தனது குழந்தையை நல்லபடியாக பெற்றெடுக்க வேண்டும் என்பதால் சிகிச்சையை தள்ளிப்போட்ட நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.

சிட்னியைச் சேர்ந்த பிரியனா ராலிங்சுக்கு ரத்தப்புற்றுநோய் இருந்தது. ஆனால் கருவில் இருக்கும் குழந்தை பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக சிகிச்சையை அவர் தள்ளிப் போட்டார்.

7 மாதமாகிவிட்ட நிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. 13ஆவது நாளில் குழந்தை கெய்டன் உயிரிழந்தது.

குழந்தை இறந்த மனவேதனையில் இருந்த பிரியனாவுக்கு கீமோதெரபி சிகிச்சை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். தனது குழந்தையுடன் ராலிங்ஸ் இணைந்து விட்டதாக அவரது குடும்பத்தார் உருக்கத்துடன் தெரிவித்துள்ளனர்.