சுவிஸ் பெண்ணை மசாஜ் செய்யும் போது துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்த உல்லாச விடுதியின் ஊழியர் கைது!

சுவிட்சர்­லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒரு­வரை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்த முயற்­சித்த உல்லாச விடுதி ஊழியர் ஒரு­வரை வெல்லவாயா பொலிஸார் நேற்று கைது செய்­துள்­ளனர்.

சுவிட்­சர்­லாந்து நாட்டைச் சேர்ந்த பெண், தனது கண­வ­னுடன் உல்­லாசப் ப­யணி­யாக இலங்கை வந்து, வெல்ல­வாயா பகு­திக்கு சென்று, அங்கு உல்­லாச விடுதி ஒன்றில் தங்­கி­யி­ருந்தார்.

இதன் போது அந்தப் பெண், தமது உடம்பை “மசாஜ்” செய்து கொள்­வ­தற்கு, ஏற்­பா­டு­களைச் செய்து தரும்­படி, உல்­லாச விடுதி முகா­மை­யா­ள­ரிடம் கேட்டுக் கொண்டார்.

அதற்­கயை, விடுதி ஊழியர் ஒரு­வரை “மசாஜ்” செய்­வ­தற்கு விடுதி முகா­மை­யாளர் அனுப்­பி­யி­ருந்தார். உல்­லாச விடுதி ஊழியர் குறித்த பெண்ணை ‘மசாஜ்’ செய்யும் தோர­ணையில், பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்ய முயற்­சித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து அந்தப் பெண் தனது கண­வ­னிடம் விட­யத்தைக் கூறி, வெல்லவாயா பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு செய்­துள்ளார். இம்­மு­றைப்­பாட்­டை­ய­டுத்து பொலிஸார் உல்லாச விடுதி ஊழியரைக் கைது செய்துள்ளனர்.