போதை இளைஞர்களை காப்பாற்ற முயற்சி!

கோவை அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மீது, மோதாமல் இருக்க பேருந்து திருப்பி நிறுத்திய அரசு பேருந்து ஒட்டுநர் மீது தாக்குதல் நடத்தியதால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையில் இருந்து ஆனைகட்டிக்கு Tn 38 n 2458 என்ற அரசு பேருந்து நேற்று இரவு புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை ஒட்டுநர் தேவகுமார் என்பவர் இயக்கிய நிலையில், பேருந்து காந்திபார்க் அருகே வரும் போது, எதிரே குடிபோதையில் மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை தாறுமாறாக இயக்கி வந்துள்ளனர். இதனை பார்த்த அரசு பேருந்து ஓட்டுநர் தேவகுமார், போதை இளைஞர்கள் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பியுள்ளார்.

இதனை பார்த்த போதை இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, அரசு பேருந்து நடத்துனரை  கண்டபடி திட்டியுள்ளார். மேலும் ஒட்டுநர் தேவகுமாரை, படியில் இருந்து கீழே இழுத்து சராமாரியாக தாக்கிய நிலையில், இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக போதை வாலிபர்களை தடுத்து விசாரித்ததில், தான் தினந்தந்தி நிருபர்கள் எனக்கூறி தனது செல்போனில் படம் பிடித்துள்ளனர்.

மேலும் பேருந்தில் வந்த பயணியை தகாத வார்த்தைகள் பேசி மிரட்டியதால் கோபமான பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் பதட்டமான இரண்டு வாலிபர்கள் தப்பியோடிய நிலையில், திருச்சி மண்ச்சநல்லூரைச் சேர்ந்த ஹரி என்பவரை மட்டும் பிடித்த ஆர் எஸ் புரம் போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். மேலும் அரசு பேருந்து ஒட்டுநர் தேவகுமார் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் முதல் கட்ட விசாரணையில் அந்த வாலிபர் தான் நிருபர் இல்லை எனவும், தனியார் நிறுவனத்தில் நான்கு சக்கர வாகன ஒட்டுநராக பணிபுரிவதாக தெரிவித்துள்ளார்.