தனியாக இருந்த மனைவிக்கு நேர்ந்த கதி!

தமிழகத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் வீட்டு வேலைக்கார பெண்ணின் உறவினரான ஆட்டோ ஓட்டுனர் கொலையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

திண்டுக்கல் நத்தம் சாலை பர்மா காலனியைச் சேர்ந் தம்பதி பிரபாகரன்-கலைச் செல்வி. பிரபாகரன் துபாயில் பணி புரிந்து வருகிறார்.

இந்த தம்பதிக்கு 13 வயது மற்றும் 10 வயதில் மகன் மற்றும் மகள் உள்ளனர். கலைச் செல்வி அங்கிருக்கும் குடியிருப்பில் முதல் மாடியில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

அதே குடியிருப்பின் தரைதளத்தில் கலைச் செல்வியின் அண்ணி செல்வர் ராணி குடியிருந்து வருகிறார்.

கடந்த 23-ஆம் திகதி மாலை 4 மணிக்கு வழக்கம் போல் மீனாட்சி என்ற பெண் வீட்டு வேலைக்காக சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு அடைக்கப்பட்டிருந்ததால், கலைச் செல்விக்கு அவர் போன் செய்துள்ளார்.

அவர் போன் எடுக்காத காரணத்தினால், அவர் அடுத்த வீட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் சிறிது நேரத்தில் துபாயில் வேலைப் பார்த்த கலைச் செல்வியின் கணவர் மீனாட்சிக்கு போன் செய்து வீட்டு வேலைக்கு செல்லும் படி கூறியுள்ளார்.

மீண்டும் மீனாட்சி வீட்டுக்கு சென்ற போது, கலைச் செல்வி மிகவும் மோசமான முறையில் கொலை செய்யப்பட்டு பாதி உடை இல்லாமல் இருந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக தரைதளத்தில் இருந்த கலைச் செல்வியின் அண்ணியிடம் தெரிவிக்க, அவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

விரைந்து வந்த பொலிசார் அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் கொண்டு வரப்பட்டு தடயங்கள் தேடப்பட்டன.

அதன் பின் இது தொடர்பாக பொலிசார் சுமார் 3 மணி நேரம் நடந்துள்ளது, அதுமட்டுமின்றி கலைச் செல்வியின் வீட்டில் நடந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்தது.

ஆனால் அந்த ஹார்ட் டிஸ்கை கொலைக்கார கும்பல் திருடிச் சென்றுள்ளது பொலிசாருக்கு தெரியவந்தது.

இதனால் கலைச்செல்வியின் உறவினர்களிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் மீது பொலிசாருக்கு எந்த ஒரு சந்தேகமும் எழுவில்லை.

இதையடுத்து பொலிசார் கிடுக்குப் பிடி விசாரணை நடத்திய போது, மோப்ப நாய் அங்கிருக்கும் பஸ் டாப்பில் போய் நின்றுள்ளது.

அதன் பின் பொலிசார் அங்கிருந்த சிசிடிவி கமராவை ஆராய்ந்து பார்த்த போது, அதில் வீட்டு வேலை செய்யும் மீனாட்சியின் உறவினர், ஆட்டோ ஓட்டுனர் சந்திர சேகர் ஆட்டோவை நிறுத்திவிட்டு நடந்து சென்றது தெரியவந்தது.

பொலிசாருக்கு அவர் மீது சந்தேகம் வர, அவரைப் பிடித்து விசாரித்துள்ளனர். ஆட்டோவை சோதனை செய்த போது, ஆட்டோவின் சீட்டிற்கு அடியில் தங்கச்சங்கிலி, வீட்டிலிருந்து திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்கும் இருந்துள்ளது.

தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது, நகைக்காக அவரை கொலை செய்ததாகவும், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சென்று இதை செய்ததாகவும், ஆட்டோ ஓட்டுனர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன் பின் பொலிசார் அவரை கைது செய்து வேறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.