விமானத்தில் சென்ற பெண்! அவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

பிரித்தானியாவைச் சேர்ந்த ஊனமுற்ற இளம் பெண் ஒருவர் விமான நிலையத்தில் வெகுநேரமாக காக்க வைத்ததால், அவருக்கு உடல் வலி அதிகம் ஏற்பட்டு மறுநாள் முழுவதும் படுக்கையிலே இருந்துள்ளார்.

பிரித்தானியாவின் Devon நகரத்தின் Brixham பகுதியைச் சேர்ந்தவர் Ruby Jones. 22 வயதான இளம் பெண் Ehlers Danos Syndrome நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் இந்த இளம்பெண்ணால் சரிவர நடக்க முடியாது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் தன் குடும்பத்தினருடன் இந்த மாதத்தின் துவக்கத்தில் Exeter-லிருந்து Dublin-க்கு விடுமுறைப் பயணமாக சென்றுள்ளார்.

அப்போது அவர் Dublin விமான நிலையத்திற்கு சென்றடைந்தவுடன் வெளியில் செல்வதற்கு விமானநிலைய ஊழியர்களிடம் வீல் சேர் கேட்டுள்ளார்.

இதோ கொண்டு வருகிறோம் என்று கூறிவிட்டு, சென்றவர்கள் வெகு நேரம் ஆகியும் வரவில்லை. இதனால் அவர் அங்கிருக்கும் படிக்கட்டில் உட்கார வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.

இது குறித்து அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நான் மூன்று நாட்கள் விடுமுறைக்காக டல்பின் சென்றிருந்தேன். ஆனால் அங்கிருக்கும் விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தினால், எனக்கு அந்த நாட்கள் மிகவும் எரிச்சலை ஏற்படுத்திய நாட்களாக இருந்தது.

அந்த சம்பவத்தின் காரணமாக எனக்கு அதிக வலி ஏற்பட்டது, என்னால் படுக்கையில் இருந்து எழவே முடியவில்லை, அன்றைய நாள் படுக்கையிலே போய்விட்டது வேதனையுடன் கூறியுள்ளார்.

Ruby Jones-க்கு Ehlers Danos Syndrome நோய் இருப்பது அவருடைய 15 வயதில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.