திருநீறு அணிவதில் இவ்வளவு மருத்துவ குணங்களா?

மனித உடலில் உள்ள எல்லா நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப்பட்டிருக்கின்றது. எல்லா நரம்புகளும் நெற்றிப் பொட்டின் வழியாக தான் மூளைக்கு செல்கின்றது. அதனால் தான் நெற்றிப்பொட்டில் அடி விழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என கூறுவார்கள்.

மனித மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரவைப்பதற்கு, நெற்றியில் சந்தனம் பூசினால் இரண்டுமே குளிர்ச்சியடையும். அதன் காரணமாகவே நெற்றியில் சந்தனம் பூசப்படுகிறது.தலையில் ஏற்படும் வியர்வை, தலைமேல் விழும் பனித்துளிகள் தலைப்பகுதியில் தங்கிடும். அவ்வாறு தலையில் தங்குவதால் தலைவலி, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் வரும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறுஞ்சுவதற்காக தான் நெற்றியில் விபூதி பூசுகிறோம்.

திருநீறு அணியும் போது ஒருவர் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்குகின்றன. காற்றில் இருக்கும் தொற்று நோய் கிருமிகள் திருநீறு பூசியிருப்பவரை நெருங்காது. ஒருவர் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு திருநீறு முக்கிய காரணமாக இருக்கிறது.

திருநீரை இரு புருவங்களுக்கு இடையில் தான் தரிக்க வேண்டும். அப்படி செய்யும்போது அந்த இடத்திற்கும் மூளை நரம்புகளுக்கும் தொடர்பு ஏற்படுகிறது. இரு புருவங்களுக்கு இடையில் திருநீறு வைக்கும்போது மூளை நரம்புகள் தூண்டப்பட்டு ஒருவர் தீர்க்கமாக சிந்தனை செய்ய தூண்டப்படுகிறார். நினைவாற்றலும் அதிகரிக்க படுகிறது. மாணவர்கள் நெற்றியில் திருநீறு அணியும் போது ஞாபக சக்தி அதிகரித்து, மூளை நரம்புகள் தூண்டப்பட்டு படிப்பில் அதிக கவனம் செலுத்துவர்

நெற்றிப்பகுதி அதிகமாக சூடாகும் பகுதி என்பதால் அப்பகுதியில் கிருமித் தொற்று ஏற்படும். மஞ்சள் கிருமி நாசினி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம். சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள். எனவே தான் விபூதி, குங்குமம் போன்றவற்றை நெற்றியில் பூசும் பழக்கம் ஏற்பட்டது.