கணவன்களை மாற்றிக் கொண்ட இரு பெண்கள்!

பிரித்தானியாவில் உயிர்த் தோழிகள் இருவர் தங்கள் கணவன்களை மற்றிக் கொண்ட நிலையில் அதில் ஒருவரின் திருமணம் மற்றும் வாழ்க்கை என அனைத்தும் பாழானதாக கண்ணீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் குடியிருக்கும் தற்போது 78 வயதான கே மோரியார்டி என்பவரே தமது வாழ்க்கையில் நடந்த அந்த கண்ணீர் கதையை வெளியிட்டுள்ளார்.

1970-ல் பரவலாக பேசப்பட்ட கணவன்களை மாற்றிக்கொள்ளும் சம்பவம் தொடர்பில் தெரிந்து கொள்ள நேர்ந்த கே, இதே முறையை தமது வாழ்க்கையிலும் முயற்சித்து பார்க்க முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து தமது உற்ற தோழியான ரீடாவை தொடர்பு கொண்டு தமது திட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

மட்டுமின்றி ரீடாவும் அவரது கணவர் டெர்ரியும் குடும்ப உறவில் மகிழ்ச்சியாக இல்லை என்பதால் இந்த திட்டம் புதிய திருப்பத்தை தரும் எனவும் கே அவரை நம்ப வைத்துள்ளார்.

இந்த நிலையில் இருவரும் அவர்களது கணவன்களிடம் குறித்த திட்டத்தை தெரிவித்து ஒப்புதல் பெற்றுள்ளனர்.

மட்டுமின்றி இரு குடும்பமும் ஒன்றாக இணைந்து கேரவன் விடுமுறைக்கு திட்டமிட்டுள்ளனர். அதன்படி தங்களது பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு நால்வரும் இரண்டு வார விடுமுறைக்கு சென்றுள்ளனர்.

அங்கே ஒருவார காலம், ஒரு தம்பதி தங்களது நான்கு பிள்ளைகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், எஞ்சிய இருவரும் ஒன்றாக விடுமுறையை கொண்டாட வேண்டும் எனவும் முடிவானது.

அதன்படி முதல் வாரம் ரீடா மற்றும் கேவின் கணவர் ராபர்ட்டும் விடுமுறையை கொண்டாட அருகாமையில் உள்ள ஹொட்டலுக்கு சென்றுள்ளனர்.

இதன் அடுத்த வாரம் கே மற்றும் ரீடாவின் கணவரும் ஒன்றாக சென்றுள்ளனர். இந்த நிலையில் விடுமுறையை முடித்து தங்கள் குடியிருப்புகளுக்கு திரும்பிய தம்பதிகளுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று பேரிடியாக இறங்கியது.

ரீடாவும் கேவின் கணவர் ராபர்ட்டும் ஒன்றாக வாழ முடிவெடுத்துள்ளதாகவும், தங்கள் நான்கு பிள்ளைகளையும் தங்களுடனே வைத்துக் கொள்ள இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

இது கே வாழ்க்கையில் பேரிடியாக அமைந்தது. வேறு வழியின்றி ரீடாவின் கணவர் டெர்ரியுடன் குடும்பம் நடத்த வேண்டிய சூழலுக்கு கே தள்ளப்பட்டார்.

மட்டுமின்றி தமக்கு நடந்த அதிர்ச்சி சம்பவத்தை பெற்றோருக்கு தெரியப்படுத்தவும் கே பயந்துள்ளார்.

இருப்பினும் கே மற்றும் டெர்ரியின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றாலும் டெர்ரி கடனில் மூழ்கி தத்தளிக்க துவங்கினார்.

மட்டுமின்றி கணவன்களை மாற்றிக்கொண்ட விவகாரம் அந்த பகுதியில் பரவியதும், வேறு வழியின்றி கே மற்றும் கே தென் கடற்கரை பகுதிக்கு குடிபெயர்ந்தனர்.

ஆனால் ரீடா மற்றும் ராபர்ட்டு தம்பதிகள் வடமேற்கு இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்தனர். இந்த நிலையில் டெர்ரியுடன் கேவின் வாழ்க்கை தடுமாற்றம் கண்டது.

7 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரும் பிரிந்துள்ளனர். இதனிடையே ராபர்ட்ட்டுடன் தமக்கு பிறந்த மகள் ரேச்சலுடன் உறவை ஏற்படுத்திக் கொண்ட கே தற்போது தனது அனுபவங்களை புத்தகமாக எழுதியுள்ளார்.