சேலை கட்டாத மணமகள்…. 3 மணி நேரத்திற்கு பிறகு நடந்த சம்பவம்!

மத்தியபிரதேச மாநிலத்தில் மணமகள் சேலை அணியாமல் மற்றும் தலையில் துண்டு போடாத காரணத்தால் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.

வர்ஷா – பஞ்சோலி ஆகிய இருவரும் அரசு ஊழியர்கள் ஆவார். இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு நாளை திருமணம் நடைபெறவிருந்தது.

திருமண வரவேற்பு இன்று நடைபெற்றது. திருமணத்திற்கு மணமகள் கவுன் அணிந்திருந்தார். மேலும், வட இந்திய பெண்கள் மரியாதை நிமித்தமாக தலையில் துண்டு போட்டு மறைத்துக்கொள்வார்கள்.

ஆனால், வர்ஷா சேலை அணிவேண்டும் என மணமகன் வீட்டார் வற்புறுத்தியுள்ளனர். மேலும் தலையில் துண்டு போட வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதற்கு மணமகள் குடும்பம் மறுக்கவே, மண்டபத்தில் வைத்து வாக்குவாதம் வெடித்து பொலிஸ் நிலையிம் வரை பிரச்சனை சென்றுள்ளது.

சுமார், 3 மணிநேர பிரச்சனைக்கு பின்னர், தங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு பெண் வேண்டாம் என மணமகன் வீட்டார் கூறியதையடுத்து, இந்த திருமணம் நிறுத்தப்பட்டது.