இன்னும் ஒரே வாரத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்! ]

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியதற்கு அதிமுக முதல்வர் பழனிசாமி அவர் கடைசிவரை கனவுதான் காண வேண்டும், அப்படி ஒன்றும் நடைபெறாது என்று கிண்டல் அடித்தார்.

இதுகுறித்து இன்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் பேசியபோது, பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் கண்டிப்பாக வந்துவிடும். ஏனெனில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது ஒரு மைனாரிட்டி ஆட்சி. இந்த ஆட்சியை மத்தியில் உள்ள பாரதிய ஜனதா ஆட்சி முட்டுக்கொடுத்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. 2017ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக சட்ட சபையில் ஓபிஎஸ் அணியினர் 11 பேர் எதிர்த்து வாக்களித்தது தொடர்பான திமுக தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருப்பதை அனைவரும் அறிவார்கள் என்று நினைக்கின்றேன்.

அந்த 11 எம்எல்ஏக்கள் பதவி செல்லுமா? செல்லாதா? என்பது பிப்ரவரி முதல் வாரத்தில் தெரிந்துவிடும் என்பதால் அப்போது நிச்சயமாக தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி இருக்காது. இதை நான் சொல்வதால் கனவு காண்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். நான் காண்பது கனவா நினைவா என நடக்கப்போவதை பொறுத்திருந்து பாருங்கள் என்று அவர் பேசினார்.

11 எம்எல்ஏக்கள் பதவி செல்லுமா செல்லாதா என்ற தீர்ப்பு வரும்போது தமிழகத்தில் ஒரு பரபரப்பு இருக்கிறது என்பதை மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.