ஆந்திர மாநிலத்துக்கு செம்மரம் வெட்ட சென்றதாக அம்மாநில போலீசார் தமிழகத்தை சேர்ந்த 37 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். செம்மர கட்டை விவகாரத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களை ஆந்திரா போலீசார் சுட்டு கொன்ற பிறகும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, தமிழா அரசு மெத்தனம் கட்டுவதையே இந்த தொடர் கைதுகள் உணர்த்துகின்றன.
நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பீலேர் பகுதியில் அம்மாநில வனத்துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பீலேர் நோக்கி வேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்த முயன்றும் நிற்காமல் சென்றதால், போலீசார் அந்த வாகனத்தை விரட்டி பிடித்து சோதனை நடத்தினர்.
போலீசார் அந்த வாகனத்தில் நடத்திய சோதனையில், அந்த வாகனத்துக்கும் 37 பேர் பதுங்கி பயந்து பதுங்கி இருந்தனர். அவர்களை இறக்கிய போலீசார், அவர்களை சோதனை செய்ததில், செம்மரங்களை வெட்டும் உபகரணங்களான 2 ரம்பம், 20 கோடாரிகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட செம்மரக்கட்டைகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், 37 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருந்து செம்மரம் வெட்ட பயன்படுத்திய ரம்பம், கோடாரி மற்றும் கடத்தி வந்த செம்மரக்கட்டைகள் உள்பட அனைத்தையும் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.