தொழில்முனைவோர் மற்றும் மத்திய திறன் மேம்பாடு இணை மந்திரியான அனந்தகுமார் ஹெக்டே என்பவர் அடிக்கடி ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி ஆவேசமாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று குடகு மாவட்டம் மாதாபுராவில் இந்து அமைப்பு சார்பான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அந்நிகழ்ச்சியில் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே கலந்து கொண்டார். பின்னர் அந்த நிகழ்வில் உரையாற்ற துவங்கிய அவர், “வழக்கத்திற்கு மாறாக சபரிமலை கோவிலுக்குள் அத்துமீறி பல பெண்கள் நுழைந்தனர்.
அவர்கள் குடகு மாவட்டத்தில் மறைந்திருப்பதாக தகவல் வந்துள்ளது. அத்தகைய தேசத்துரோகிகளுக்கு இடம் தரக்கூடாது. அவர்களை இங்கு கண்டால் மண்ணோடு மண்ணாக்குங்கள். மேலும், இந்து பெண்களை யாராவது தொட்டால், அவர்களின் கைகளை வெட்டுங்கள்.” என ஆவேசமாக பேசியுள்ளார்.
ஹெக்டேயின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பாஜக செய்தி தொடர்பாளராக மதுசூதனன், இது பற்றி. “‘அனந்தகுமார் ஹெக்டே இவ்வாறு பேசியது தவறு. அவரது பேச்சுக்கும், பாஜகவுக்கும் தொடர்பு இல்லை. இது அவரது தனிப்பட்ட கருத்து. ஒருபோதும் பாஜக இதை நியாயப்படுத்தாது.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சி எம்பி உக்ரப்பா, “அனந்தகுமார் ஹெக்டே கூறிய கருத்து மிகவும் தவறானது. இது அவர் தனது மனநிலையை இழந்துவிட்டார் என்பதை காட்டுகிறது. அவரை மந்திரிசபையில் இருந்து மோடி நீக்க வேண்டும்” என கூறியுள்ளார்.