சின்னத்திரை நடிகை ஆயிஷா துணிச்சலாக பாத்திரமொன்றை ஏற்றுள்ளார்.
பொன்மகள் வந்தாள் தொடரில் துறுதுறு பெண்ணாக நடித்து ரசிகர்களை ஈர்த்தவர் ஆயிஷா. ஆனால் அந்த தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார். பின்னர் மாயா சீரியலில் நடித்தார். தற்போது மாயா முடிந்து விட்ட நிலையில் அடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சத்யா தொடரில் நடிக்க இருக்கிறார்.
இதில் என்ன சிறப்பு என்றால் இதில் அவர் ஆணாக நடிக்கிறார். வழக்கமாக ஆண்கள் பெண்களாக நடிப்பார்கள். சின்னத்திரையில் முதன் முறையாக ஆயிஷா ஆணாக நடிக்கிறார்.
இதற்காக தன் உடல் எடையையும் குறைத்திருக்கிறார். சீரியலின் தொடக்கத்தில் ஆணாக அறிமுகமாகி அதன் பிறகு மெல்ல மெல்ல பெண்ணாக மாறுகிற மாதிரியான கதையாம். கதையின் திருப்பமே அதில் இருப்பதால் இப்போதைக்கு கேரக்டர் பற்றி ரகசியம் காக்கிறார்கள்.