டெல்லியில் சோனி என்ற பெண் தனது கணவனுடனான வாழ்க்கை கசந்துவிட்ட நிலையில் காதலனுடன் சென்ற நிலையில் இறுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், தனது கணவனுடனான வாழ்க்கை பிடிக்காத காரணத்தால் 30 வயதான இன்டிஜர் என்பவருடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சென்றுள்ளார்.
தனது காதலருடன் வசித்து வந்த இவர், தன்னை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தியுள்ளார். இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, உன்னை நம்பி வந்த என்னை எப்போது திருமணம் செய்துகொள்வாய் என சோனி கேட்டதையடுத்து இவர்கள் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டதில், கோபத்தில் சோனியின் தலையில் அடித்து கொலை செய்துள்ளார் இன்டிஜர்.
பின்னர், சோனி தூக்கில் தொங்கிவிட்டதாக பொலிசில் தெரிவித்துள்ளார். ஆனால் பிரதேச பரிசோதனை அறிக்கையில் உண்மை வெளியானதையடுத்து, சோனிக்கு தனது முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கு தாமதமானது, இதனால் அவளை திருமணம் செய்துகொள்வதில் எனக்கு தாமதம் ஏற்பட்டது.
இதனை வைத்து நாங்கள் சண்டைபோட்டதில், இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது என கூறியுள்ளார்.