பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு.!! பேரதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்கள்.!!

கடந்த 6 நாட்களாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு வைத்த 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த கோரிக்கைகளில்,

6வது ஊதியக்குழுவில் தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊதியம் போல் சமமாக வழங்கப்படவில்லை.

தமிழக அரசு தன்பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தை நீக்கம் செய்து, பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும்.

பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களின் பணியில் சமீப காலமாக சமூக விரோதிகளின் தலையீடும், ஆசிரியர்களின் பணிக்கு பாதுகாப்பின்மையும் ஒரு தொடர் நிகழ்வாக நடந்து வருகிறது. எனவே ஆசிரியர்களின் பாதுகாப்புக்கு தனியாக ஒரு சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வை நீக்கிட வேண்டும். மேலும் ஆசிரியர்களை பதிவு மூப்பு அடிப்படையில் நியமித்திட வேண்டும்.

மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு தொடக்கப்பள்ளிகளை மூடும் நோக்கத்தை கைவிட்டு அனைத்துப் பள்ளிகளும் செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 7 வது நாளாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தை ஒடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், போராட்டம் இன்னும் தீவிரமடையவே செய்துள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு வேறு வழியின்றி 450 ஆசிரியர்களை கைது செய்து அவர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

மேலும் இன்றும் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இந்நிலையில் சற்றுமுன் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 450 ஆசிரியர்களுடைய பணியிடங்கள் காலியானதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், போராட்டத்தில் பங்கேற்காத ஆசிரியர்கள், 450 இடங்களில் பணியிட மாறுதல் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.