ஸ்கிசோப்ரினியா எனப்படும் மனச்சிதைவு நோயினால் உலகில் பலரும் தங்கள் வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர். உலகம் முழுவதும் சுமார் 2 கோடி பேர் இந்த நோயினால் அவதிப்படுகின்றனர். இப்பொழுது இருக்கும் மருந்துகளின் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர இதை முற்றிலும் குணப்படுத்த முடியாது.
மன நல நோய்களில் மிக மோசமான நோயாக மனச்சிதைவு நோய் கருதப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் முதலில் தங்களை இந்த சமுதாயத்தில் இருந்து தனிமைப் படுத்திக் கொள்வார்கள். மேலும் யாரை பார்த்தாலும், எதைப் பார்த்தாலும் சந்தேகம்.
தங்களின் சொந்த வேலைகளான குளிப்பது, பல் துலக்குவது, சாப்பிடுவது, தூங்குவது என எல்லா செயல்களையும் செய்ய மறந்து விடுவர். இது ஒரு வகையில் ஒரு மனிதனின் வாழ்க்கையை முற்றிலும் முடக்குவதாகவும்.
இப்போது இருக்கும் மருந்துகள் ஓரளவுக்கு இந்த நோய் அறிகுறிகளில் இருந்து வெளிவருவதற்கு உதவினாலும் ஆயள் வரை அவர்கள் இந்த மருந்துகளை உட்கொள்ளவேண்டும்.
சிறிது நாள் மருந்து உட்கொள்ள மறந்தாலும் திரும்பவும் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அது மட்டுமில்லாது இதனால் ஏற்படும் பக்க விளைவுகளும் அதிகம்.
உலகம் முழுவதும் பல ஆராய்ச்சியாளர்கள் இந்த நோய்க்கு நிரந்தர தீர்வைக் கண்டுபிடிக்கப் பல ஆராய்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் ரஷ்யாவைச் சேர்ந்த பாவ்லோன் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பெல்ட்மேன் ஆய்வு கூடத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த முயற்சியில் இப்போது வெற்றி பெற்றுள்ளனர். T
AAR1 என தற்போதுப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தை ஆய்வகத்தில் எலிகளுக்கு ஊசி மருந்துகளின் மூலம் செலுத்துவதின் மூலம் அவற்றின் நரம்பு மண்டலும், மூளையிலும் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்பட்டதைக் கண்டறிந்து உள்ளனர்.
இதையடுத்து இந்த மருந்தை மாத்திரை வடிவில் கொண்டு வந்து மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்கும் கிளினிகல் ட்ரையல் செய்யப்படும் என்றும், பின்னர் இதன் குறைப்பாடுகள் மற்றும் வேலை செய்ய எடுத்துக்கொள்ளும் காலம், பக்க விளைவுகள் அனைத்தும் ஆராய்ந்தப் பின்னர் இந்த மருந்து மக்களின் பயன்பாட்டிற்கு வரும் எனக் குழுவின் தலைவர் ஏலியானா சுக்னோவ் தெரிவித்தனர்.