கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டியை அடுத்துள்ள மெல்மெட்டுக்குப்பத்தை சார்ந்தவர் ராஜேந்திரன் (36). இவரது மனைவியின் பெயர் ரேவதி. இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
ராஜேந்திரன் கூலி தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில்., அதே பகுதியை சார்ந்த அன்பழகனின் மனைவி தமிழரசி (வயது 35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும்., அன்பழகனுக்கும் தமிழரசிக்கும் பெண் குழந்தை உள்ள நிலையில்., தமிழரசி கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட அப்பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே., இவர்கள் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உள்ளச்சம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த விசயமானது இருவரின் குடும்பங்களுக்கும் தெரியவரவே., இது குறித்து இருவரது உறவினர்களும் கண்டித்துள்ளனர்.
உறவினர்களின் கண்டிப்பை ஏற்றுக்கொள்ளாத இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்து., கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக இல்லங்களை விட்டு வெளியேறிய இருவரும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தென்னூர் கிராமத்தில் வடைக்கு வீடு எடுத்து., அங்கேயே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.
இவர்கள் இருவரையும் காணாது தேடியலைந்த குடும்பத்தினருக்கு இறுதியாக இவர்கள் தென்னுரில் வாழ்ந்து வருவதை அறிந்து., கடந்த மாதம் 24 ம் தேதியன்று தமிழரசியின் உறவினர்கள் தென்னூருக்கு சென்று தமிழரசியை மீண்டும் மேல்மெட்டுக்குப்பத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
இதன் காரணாமாக கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்த தமிழரசி., யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் இருந்த விஷ பாட்டிலை எடுத்துக்கொண்டு அங்கிருக்கும் முந்திரி தோப்பிற்கு சென்ற அவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இவரை காணாது மீண்டும் அங்குள்ள பகுதிகளில் தேடியலைந்த உறவினர்கள் அவர் முந்திரி தோப்பில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது உடலை கண்டு கதறியழுத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தமிழரசியின் பிரேதத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து தகவலறிந்த ராஜேந்திரன் மேல்மெட்டுக்குப்பத்திற்கு வந்து அவரும் அதே முந்திரி தோப்பில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.