இந்தியாவில் தாயின் தவறான நடத்தையை தட்டி கேட்ட மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் பஸ்தி நகரை சேர்ந்தவர் ரவீந்தர் பதக் (30). இவர் தனது தாயை பிரிந்து தனியாக வசித்த நிலையில் சமீபத்தில் தாயுடன் ஒரே வீட்டில் வசிக்க தொடங்கினார்.
அந்த வீட்டில் ரவீந்தர் தாயின் நண்பர் அஜீத்தும் உடன் தங்கியிருந்தார்.
இந்நிலையில் கார் ஓட்டுனராக உள்ள ரவீந்தர் இரு தினங்களுக்கு முன்னர் தனது பணி முடிந்து வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது தனது தாயும், அஜீத்தும் நெருக்கமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியைடைந்தார்.
இது குறித்து இருவரிடமும் அவர் சண்டை போட்ட நிலையில் ஆத்திரமடைந்த அவர் தாயும், அஜீத்தும் ரவீந்தர் தலையில் செங்கல்லால் அடித்தனர்.
இதில் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து அஜீத் ஆம்புலன்ஸுக்கு போன் செய்த நிலையில் அங்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து ரவீந்தர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து அவர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அஜீத்தையும், ரவீந்தர் தாயையும் கைது செய்தனர்.
பின்னர் ரவீந்தர் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் குற்றவாளிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.