மாணவன் பரிதாப மரணம்? கண்ணீர் விட்டு கதறும் தந்தை….

தமிழகத்தில் விடுதி வார்டனுக்கு பிரியாணி வாங்கச் சென்ற பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்த நிலையில், வார்டன் பிரியாணி சாப்பிடுவதற்கு என் மகன் உயிர் போவதா என்று தந்தை கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் சென் ஜோசப் என்ற மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

இங்கு மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு ஹாஸ்டலும் உள்ளது என்பதால், கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் அங்கே தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஹாஸ்டலில் மெடிக்கல் கேம்ப் நடத்தப்பட்டது. கேம்ப் முடிந்தவுடன் கேம்பிற்கு வந்த மருத்துவர்கள் மற்றும் சேவிலியர்களுக்கு பிரியாணி விருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனால் ஹாஸ்டன் வார்டன்கள் லூர்து மற்றும் எலியாஸ் , ஹாஸ்டலில் தங்கிப் படித்த ஆதமங்கலம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாத் (11 வகுப்பு) என்ற மாணவனிடம் இரு சக்கர வாகனம் ஒன்றைக் கொடுத்து சுமார் 5 கி.மீற்றர் தொலைவில் இருக்கும் கடைக்கு அனுப்பி பிரியாணி வாங்கி வரும் படி கூறியுள்ளனர்.

அதன் படி மஞ்சுநாத் பிரியாணி வாங்க சென்ற போது, எதிர்பாரதவிதமாக மாணவன் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது பின்னே வந்த டிராக்டர் மோதியதால் மஞ்சுநாத்திற்கு பயங்கரமாக அடிபட்டது.

இதனால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மஞ்சுநாத்தின் தந்தை ரங்கநாதன். என் மகன் மைனர் என்று தெரிந்தும், அவனிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை என்று தெரிந்தும் அவனிடம் இரு சக்கர வாகனத்தை கொடுத்து பிரியாணி வாங்க அனுப்பியுள்ளனர்.

ஹாஸ்டலுக்கு படிக்க அனுப்பிய என் மகனை அனுமதியின்றி வெளியே அனுப்பியுள்ளனர். இது போன்ற மலைப்பகுதியில் அவனால் எப்படி வண்டி ஓட்ட முடியும் இதைக் கூட யோசிக்காமல், அவர்கள் செய்த காரியத்தால் என் மகன் இறந்துவிட்டான்.

இது குறித்து அங்கிருப்பவர்களிடம் கேட்டால், அவர்கள் எதுவுமே நடக்காதது போல் செல்கின்றனர். பொலிசில் இது குறித்து புகார் அளித்து எந்த ஒரு பயனும் இல்லை, என் மகன் இறப்பிற்கு நியாயம் வேண்டும். வார்டன்கள் பிரியாணி சாப்பிடுவதற்கு என் மகன் உயிர் போவது எந்த வகையில் நியாயம். இதில், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கண்ணீர்விட்டு கூறியுள்ளார்.