தனது கணவர் கார்த்திகேயன் மறைவுக்கு பின்னர் அதிலிருந்து மீண்டு தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நடிகை மைனா நந்தினி, தனது கடந்த காலத்தை பற்றி பேசவிரும்பவில்லை என கூறியுள்ளார்.
நந்தினி கூறியதாவது, நான் என்ன செய்தாலும் என்னைபற்றி எதாவது பேசுறவங்க பேசிக்கிட்டேதான் இருப்பாங்க. பெண்ணான எனக்கு மட்டுமல்ல ஆணுக்கும் இழப்பின் வலி சரிசமம்தான்.
பிராக்டிக்கலா இருந்தா மட்டும் தான் வாழ்க்கையில் இருப்பதை சமாளிக்க முடியும். நான் அப்படித்தான் வாழ்கிறேன். எதுவாக இருந்தாலும் சரியாகிவிடும் என்றுதான் எனது பெற்றோர் எனக்கு சொல்லி வளர்த்தார்கள்.
எந்த கஷ்டம் வந்தாலும் அதிலிருந்து வெளியே வர பழகிக்கணும் என கூறியுள்ளார்.
தற்போது அரண்மனை கிளி தொடர் மற்றும் இரண்டு படங்களில் நடித்துள்ளார் மைனா நந்தினி.