இன்றைய ராசிபலன் (29/01/2019)

  • மேஷம்

    மேஷம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள்.  மனைவி வழியில்ஆதரவுப் பெருகும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்கு வீர்கள். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். பிற்பகல் 2 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.அரசால் அனுகூலம் உண்டு.வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில்  உங்களின் திறமையைக் கண்டு மேலதி காரி வியப்பார். அமோகமான நாள்.

  • மிதுனம்

    மிதுனம்:  புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் நீண்ட நாளாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வேற்று மதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது  ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சகஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

  • கடகம்

    கடகம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை  தீரும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம்  செய்வீர்கள்.உத்யோகத்தில் மேலதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பார். தைரியம் கூடும் நாள்.

  • கன்னி

    கன்னி: குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். அழகு,இளமைக் கூடும். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.பழுதான மின்னணு சாதனங்களை மாற்று வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம்  உண்டு. உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடிவரும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

  • துலாம்

    துலாம்: பிற்பகல் 2 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில்  பற்றுவரவு சுமார்தான். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். மாலைப்பொழுதிலிருந்து நிம்மதி கிட்டும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். பிற்பகல்  2 மணி முதல் ராசிக்குள் சந்திரன்நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப் படும் நாள்.

  • தனுசு

    தனுசு: கணவன்-மனை விக்குள் அன்யோன்யம் பிறக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வேற்றுமதத்தவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது தொழில் தொடங்கும்  முயற்சி வெற்றியடையும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

  • மகரம்

    மகரம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் அரவணைப்பு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள்  பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில்மதிக்கப்படுவீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.  உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். இனிமையான நாள்.

  • மீனம்

    மீனம்: பிற்பகல் 2 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். வியாபாரத்தில்பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மாலையிலிருந்து எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும் நாள்.