தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டக்காமன்பட்டியை சேர்ந்த கணேசன் மகன் வெங்கடேஸ் என்ற 20 வயதான வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த1 ஆம் தேதி வெங்கடேஷ் சிறுமியின் வீட்டிற்கு வந்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.
அதன் பின்பும் தொடர்ச்சியாக அழைத்ததாகவும் சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் சிறுமி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை போக்சோ சட்டத்தின் கீழ்கைது செய்தனர்.
சமீப காலமாக தேனி மாவட்டத்தில் 17 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளிடம் அத்து மீறி வாலிபர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருவது அப்பகுதி மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.