மகனை பறிகொடுத்த பெற்றோரின் வீட்டிற்கு சென்று கதறி அழுத சிம்பு! வெளியான வீடியோ

நடிகர் சிம்பு இறந்த தன்னுடைய ரசிகனின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்து கதறி அழுத வீடியோ வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

பிரபல திரைப்பட நடிகரான சிம்புவின் ரசிகர் ஒருவர் கடந்த ஆண்டு பிளக்ஸ் விவகாரம் தொடர்பாக இறந்தார். அப்போது சிம்பு உள்ளூரில் இல்லாததால், அவரால் வர முடியவில்லை, அதற்கு பதிலாக சிம்புவின் தந்தை ராஜேந்திரன், நடிகர் மகத் போனேறோர் சென்றிருந்தனர்.

இந்நிலையில் சிம்பு அண்டா பால் அபிஷேகம் விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், இறந்த ரசிகரின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரை கட்டியணைத்து கதறி அழுதார். இனிமேல் நான் உங்களுக்கு மகன், அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன் என்று கூறினார்.

அப்படி அவர் உருக்கமாக பேசிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.