ஓட்டு போடாவிட்டால் நிச்சயம் வருத்தப்படுவீர்கள்!! எச்சரித்த மோடி!!

பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமையில் வானொலி மூலம் நாட்டுமக்களிடம் மன் கீ பாத் என்ற பெயரில் உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்வின் மூலம் பல்வேறு தகவல்களை அளிக்கிறார். அவ்வாறு நேற்றைய மன் கீ பாத் நிகழ்வில் கடந்த 25-ந் தேதி வாக்காளர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் வாக்குரிமையின் முக்கியத்துவம் பற்றி உரையாற்றினார்.

அந்த உரையில், முதன் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் 21-ம் நூற்றாண்டில் பிறந்தவர்கள் தனது முதல் வாக்கை அளிக்க இருக்கின்றனர். அதாவது தேசத்தின் வளர்ச்சியில் தனது பங்கை அளிக்க இருக்கின்றனர். அவர்களின் கனவை நிறைவேற்ற தேசம் காத்து கொண்டிருகிறது.

தகுதி வாய்ந்த வயது கொண்ட அனைவரும் வாக்களராக தங்களை தாமாகவே முன்வந்து இணைத்து கொள்வது அவசியம். இது நமது வாழ்வில் மிகவும் முக்கியமானது என்பதை உணர வேண்டும். வாக்களிப்பது ஒரு புனிதமான கடமை. வாக்களிப்பவர் தனது வாக்கை செலுத்தாவிட்டால் பின்னர் வருந்த நேரிடும்.

அதே போல முக்கிய பிரபலங்கள் தனது மக்களை வாக்களிக்க கோரி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். இந்தியாவின் தேர்தல் குறித்து உலக நாடுகள் பிரமித்து போய் உள்ளது. தேர்தல் கமிஷனின் திறமையான செயல்பாட்டால் ஒவ்வொரு குடிமகனும் பெருமை அடைய வேண்டியுள்ளது. இது தான் ஜனநாயக நாட்டின் பெருமை.

தேர்தல் நேர்மையான முறையில் நடக்கும் என ஒவ்வொரு மாநிலத்தின் தேர்தல் கமிஷன்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என்று அனைத்து தரப்பினர் மீதும் நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். தேர்தல் சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறேன்’ என கூறியுள்ளார்.

இவ்வாறு, பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு வாக்குரிமை குறித்த விஷயங்களை பற்றிய விழிப்புணர்வு பற்றியும், வாக்குரிமையை வீணடித்தல் தவறானது பின்னர் அதற்காக நீங்கள் வருந்த வேண்டியிருக்கும் எனவும் கூறியுள்ளார்.