அகால மரணமடைந்த பாண்டிருப்பைச் சேர்ந்த இளைஞன் தனுஷின் இறுதி நல்லடக்கம் இன்று செவ்வாய்க்கிழமை பி.ப 3.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
தற்கொலை செய்துகொண்ட தனுஷின் உடல் நேற்று (28) மீட்டெடுக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகள் இடம்பெற்று இன்று காலை செவ்வாய்க்கிழமை உறவினர்களிடம் உடல் கையளிக்கப்பட்டது .
பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் உள்ள அன்னாரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பாண்டிருப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
அனைவருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகும் தனுஷின் இந்த எதிர்பாராத இழப்பு அவரின் நண்பர்கள், உறவினர்கள், மட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது கல்முனை பிராந்தியமே சோகமயமாக உள்ளது.
சிறந்த சமூக சேவையாளனாகவும், சிறந்த செயற்பாட்டாளராகவும் தனுஷ் விளங்கியதுடன், பல பொது அமைப்புக்களில் முக்கிய பொறுப்புக்களில் இருந்து சமூக சேவையிலும் சிறப்பாக முனைப்புடன் செயற்பட்ட தனுஷின் இழப்பு இலகுவில் ஏற்றுக்ககொள்ள முடியாத ஒர் இழப்பாகவே உள்ளது.