ஆந்திர மாநிலத்தில், 50 மாணவர்களுடன் பள்ளிப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில், 3 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
ஆந்திர மாநிலம், குண்டூர் அருகே இன்று காலை தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று 50 பள்ளி மாணவர்களுடன் சென்றுகொண்டிருந்த போது, அந்தப் பகுதியில் ஒரு பாலத்தை கடக்க முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 17 மாணவர்கள் காயமடைந்த நிலையில், 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்துள்ள அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த விபத்து குறித்து பேருந்து ஓட்டுநரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.